கர்நாடக தியேட்டர்களில் 50 சதவிகித இருக்கைக்கு மட்டுமே அனுமதி
ADDED : 1648 days ago
கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனாவின் தாக்கம் தீவிரமானது முதல் தியேட்டர்கள் மூடப்பட்டது. கொரோனாவின் தாக்கம் குறைந்ததும், ஊரடங்குகள் தளர்த்தப்பட்டதின் ஒரு பகுதியாக கர்நாடக மாநிலத்தில் உள்ள தியேட்டர்களில் 50 சதவிகித இருக்கைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அதன் பிறகு அது 100 சதவிகித அனுமதியாக மாற்றப்பட்டது.
இந்த நிலையில் கொரோனாவின் இரண்டாவது அலை தீவிரமடைந்து வரும் நிலையில் முதற்கட்டமாக பெங்களூரு, மைசூரு, கலபுரகி, தட்சின கன்னடா, உடுப்பி, பீதர் மற்றும் தர்வார் மாவட்டங்களில் உள்ள தியேட்டர்களில் 50 சதவிகித இருக்கைக்கு மட்டுமே அனுமதி அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. நிலைமை கட்டுக்குள் வராவிட்டால் மீண்டும் தியேட்டர்கள் மூடப்படும் என்று தெரிகிறது.