நடிகை ஆனார் சந்தனகடத்தல் வீரப்பன் மகள்
ADDED : 1648 days ago
சந்தன கடத்தல் வீரப்பனுக்கு முத்து லட்சுமி என்ற மனைவியும் வித்யாராணி, விஜய லட்சுமி என்று இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் இளைய மகள் விஜயலட்சுமி சினிமாவில் நடிகையாக அறிமுகமாகி இருக்கிறார். விஜயலட்சுமி நடிக்கும் படத்துக்கு 'மாவீரன் பிள்ளை என்று பெயர் வைத்துள்ளனர்.
இந்த படத்தை கே.என்.ஆர்.ராஜா இயக்கி, கதாநாயகனாகவும் நடிக்கிறார். விஜயலட்சுமி நடிக்கும் தோற்றத்தை படக்குழுவினர் தற்போது வெளியிட்டு உள்ளனர். அதில் கையில் துப்பாக்கி வைத்துக் கொண்டு சந்தன கடத்தல் வீரப்பன் போன்று போஸ் கொடுள்ளார். படத்தின் டீசரில் மது ஒழிப்பு மற்றும் தண்ணீர், விவசாயிகள் பிரச்சினை பற்றிய போராட்டங்களை அவர் நடத்துவது போன்று சித்தரிக்கப்பட்டுள்ளது.