தெலுங்கு டிகிரி காலேஜ் தமிழில் போலீஸ்காரன் மகள் ஆனது
கடந்த ஆண்டு தெலுங்கில் வெளியாகி பரபரப்பு கிளப்பிய படம் டிகிரி காலேஜ். ஆணவக் கொலை பற்றி பேசிய இந்தப் படம் கூடவே அடல்ட் கண்டன்ட் படமாகவும் உருவாகி இருந்தது. நரசிம்மா நந்தி என்பவர் இயக்கிய இருந்த இந்தப் படத்தில் நந்தியா ராவ், ஸ்ரீனிவாஸ் மோகன், ஸ்ரீதிவ்யா, ஜெயவானி, நடித்திருந்தார்கள்.
போலீஸ் அதிகாரியின் மகளான ஹீரோயின், தாழ்த்தப்பட்ட சமூக இளைஞனை காதலிப்பார். ஜாதி வெறி பிடித்த போலீஸ் அதிகாரி ஜாதி மானத்தை காப்பாற்ற கொலை வெறியுடன் அலைவார் கடைசியில் காதல் வென்றதா? ஜாதி வென்றதா என்பதுதான் கதை.
தற்போது இந்த படம் தமிழில் போலீஸ்காரன் மகள் என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது. ஏஆர்கே.ராஜராஜா தமிழ் மொழி மாற்றத்தை செய்துள்ளார். 40 வருடங்களுக்கு முன்பு ஸ்ரீதர் இயக்கத்தில் முத்துராமன் நடிப்பில் போலீஸ்காரன் மகள் என்ற படம் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.