11ம் தேதி இருமுறை ஒளிபரப்பாகும் சர்பத்
ADDED : 1693 days ago
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல படங்கள் தற்போது தியேட்டர்களுக்கு பதிலாக ஓடிடி தளத்தில் வெளியாகிக் கொண்டிருக்கிறது. சில படங்கள் நேரடியாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. சமீபத்தில் புலிக்குத்தி பாண்டி, ஏலே, படங்கள் டி.வியில் நேரடியாக ஒளிபரப்பானது. மண்டேலா படம் நாளை(ஏப்., 4) டிவியில் ஒளிபரப்பாகிறது.
அந்த வரிசையில் அடுத்து ஒளிபரப்பாக இருக்கிறது கதிர், சூரி, ரகஸ்யா நடித்த சர்பத். இயக்குனர் பிரபாகரன் இயக்கத்தில் உருவான இத்திரைப்படத்தினை 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ மற்றும் வியாகாம் 18 ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது. அஜேஷ் அசோக் இசையமைத்துள்ளார்.