அப்பாவுக்காக குத்தாட்டம் போட்டு ஓட்டு கேட்ட மகள்
ADDED : 1699 days ago
சட்டசபை தேர்தலில் நடிகரும், மக்கள் நீதி மையம் தலைவருமான கமல்ஹாசன், கோவை தெற்கு தொகுதியில் வேட்பாளராக களமிறங்கி உள்ளார். இவருக்கு ஆதரவாக இவரின் அண்ணன் மகளும், நடிகையுமான சுஹாசினி தேர்தல் பிரச்சாரம் செய்து வந்தார். நேற்று கமலின் மகளும், நடிகையுமான அக்ஷராஹாசனும் பிரச்சாரம் செய்தார். அக்ஷராவும் சுஹாசினியும் தெருவில் குத்தாட்டம் போட்டு ஓட்டு கேட் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இவர்களது ஆட்டத்தை பார்த்த அந்த பகுதியில் உள்ள பெண்களும் ஆடினார்கள்.