புதியவர் இயக்கத்தில் ஜெயம் ரவியின் புதிய படம்
ADDED : 1691 days ago
பொன்னியின் செல்வன், ஜன கன மன படங்களில் நடித்து வருகிறார் ஜெயம் ரவி. அடுத்து புதியவர் ஆண்டனி பாக்யராஜ் இயக்கும் படத்தில் நடிக்கிறார். ஜெயம் ரவியின் 29வது படமாக உருவாகும் இப்படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. அடங்கமறு, பூமி படங்களுக்கு பின் மூன்றாவது முறையாக மருமகன் ஜெயம் ரவியின் படத்தை சுஜாதா தயாரிக்கிறார். ஜூலையில் படப்பிடிப்பு துவங்குகிறது.