துப்பறியும் திரில்லர் கதையில் பிரியா பவானி சங்கர்
ADDED : 1646 days ago
இந்தியன் 2, குருதி ஆட்டம், பத்து தல, பொம்மை உள்ளிட்ட அரை டஜன் படங்களில் நடித்து வரும் பிரியா பவானி சங்கர் மேலும் ஒரு படத்தில் கமிட்டாகி உள்ளார். சர்ஜுன் இயக்கும் இப்படம் துப்பறியும் கதையுடன் திரில்லர் படமாக உருவாகிறது. கொலை வழக்கு தொடர்பாக அதில் உள்ள உண்மையை கண்டறியும் பத்திரிக்கையாளராக பிரியா நடிக்கிறார். அவருக்கு உதவி புரியும் வேடத்தில் மெட்ரோ சிரிஷ் நடிக்கிறார். ராமேஸ்வரம், சென்னை உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடக்கிறது.