கொரோனாவால் ஓராண்டுக்கு பின் நடந்த திருமணம்
ADDED : 1646 days ago
மலையாள நடிகையான உத்ரா உன்னி, தமிழில் 'வவ்வால் பசங்க' என்ற படத்தில் நடித்தார். இவருக்கு நித்தேஷ் நாயர் என்பவருடன் திருமண நிச்சயமாகி கடந்தாண்டு ஏப்ரலில் திருமணம் நடக்க இருந்தது. ஆனால் கொரோனா பிரச்னையால் திருமணத்தை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துவிட்டதாக அறிவித்து இருந்தார். இந்நிலையில் இன்று(ஏப்., 5) இவர்கள் திருமணம் செய்துள்ளனர். திருமண போட்டோவை சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார் உத்ரா. பலரும் மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.