உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மாணவியின் படிப்பு செலவுக்கு ரூ. 1 லட்சம் வழங்கிய காஜல்

மாணவியின் படிப்பு செலவுக்கு ரூ. 1 லட்சம் வழங்கிய காஜல்

தமிழில் இந்தியன்-2, தெலுங்கில் ஆச்சார்யா என சில படங்களில் நடித்து வருகிறார் காஜல் அகர்வால். இந்நிலையில், டுவிட்டரில் கல்வி உதவி கேட்ட மாணவி ஒருவருக்கு உதவி செய்துள்ளார் காஜல் அகர்வால்.

ஐதராபாத்தைச் சேர்ந்த சுமா என்ற எம்.பார்மஸி மாணவி, தான் கல்லூரி தேர்வுக்கு ரூ. 83 ஆயிரம் செலுத்த வேண்டும் என்றும், சமீபத்தில் வேலையை இழந்ததால் தன்னால் அந்த தொகையை செலுத்த முடியவில்லை. அதனால் தனக்கு உதவி செய்யுமாறு கேட்டிருந்தார்.

அதையடுத்து தனது மேனேஜர் மூலமாக மாணவி சுமாவை தொடர்பு கொண்டு அவரது வங்கி கணக்கு விவரங்களை கேட்டறிந்த காஜல் அகர்வால், தன்னிடம் 83 ஆயிரம் கேட்ட மாணவி சுமாவின் வங்கி கணக்கில் ரூ. 1 லட்சம் செலுத்தியுள்ளார். இந்த தகவல் வெளியானதை அடுத்து காஜலின் சேவையை பாராட்டி பலரும் மாணவி சுமாவிற்கு உதவி செய்ததற்காக அவருக்கு நன்றி தெரிவித்து வருகிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !