சயின்ஸ் திரில்லர் வெப்சீரிஸில் அமலாபால்
ADDED : 1697 days ago
குட்டி ஸ்டோரி என்ற வெப்சீரிஸில் கவுதம் மேனன் இயக்கத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த அமலாபால், தெலுங்கில் பிட்டா கதாலு என்ற வெப்சீரிஸில் நந்தினி ரெட்டி இயக்கத்தில் நடித்திருந்தார். இதில் அவர் நடித்திருந்த துணிச்சலான வேடம் தெலுங்கு ரசிகர்களை கவர்ந்தது.
தற்போது மற்றுமொரு வெப்சீரிஸில் நடிக்கிறார். இது சயின்ஸ் பிக்சன் கலந்த திரில்லர் வெப்சீரிஸாக உருவாகிறது. பவன் குமார் இயக்குகிறார். 8 எபிசோட் கொண்ட இந்தந தொடரில் அமலாபால் உடன் ராகுல் விஜய்யும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். 2021 இறுதியில் ஏஎச்ஏ என்ற தளத்தில் இந்த தொடர் வெளியிடப்படுகிறது.