ஈஸ்டர் கொண்டாடிய நயன்தாரா - விக்னேஷ் சிவன்
ADDED : 1646 days ago
நானும் ரவுடி தான் படத்தில் இணைந்த நயன்தாரா - விக்னேஷ்சிவன் காதல் ஜோடி, தற்போது காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் மீண்டும் இணைந்துள்ளனர். விஜய் சேதுபதி நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் இன்னொரு நாயகியாக சமந்தாவும் நடிக்கிறார்.
கடந்த ஐந்து ஆண்டுகளாக காதலர்களாக வலம் வரும் நயன்தாரா - விக்னேஷ் சிவன் இருவரும் இந்து மற்றும் கிறிஸ்தவ பண்டிகைகளை விமரிசையாக கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில், நேற்று அவர்கள் ஈஸ்டர் பண்டிகை கொண்டாடியிருக்கிறார்கள். அப்போது எடுத்த போட்டோவை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள விக்னேஷ் சிவன், ஈஸ்டர் பண்டிகை ஒரு மகிழ்ச்சியான நாள் என்றும் பதிவிட்டுள்ளார்.