பந்தயத்தில் தோற்ற கீர்த்தி சுரேஷுக்கு தண்டனை
மகாநடி படத்தில் பழம்பெரும் நடிகை சாவித்திரியின் கதாபாத்திரத்தில் நடிக்கும் அளவுக்கு பக்குவப்பட்ட நடிப்பை வெளிப்படுத்தும் கீர்த்தி சுரேஷ், படப்பிடிப்பு தளத்தில் அனைவருடன் ஜாலியாக பழகி பொழுதுபோக்கும் சுபாவம் கொண்டவர். அந்த வகையில் சமீபத்தில் தெலுங்கில் நடித்து வெளியாகியுள்ள ரங்தே படத்தின் படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை 'பந்தயத்தில் தோற்றதற்கான தண்டனை' என்கிற கேப்சனுடன் தனது சோஷியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார் கீர்த்தி சுரேஷ்.. அந்த வீடியோவில் அவர் பத்து முறை சிட்-அப்ஸ் எடுக்கிறார்
இது குறித்து வெளியாகியுள்ள தகவல் என்னவென்றால், படப்பிடிப்பில் கீர்த்தி சுரேஷ் உணவு கட்டுப்பாட்டை தொடர்ந்து பின்பற்றி வந்ததாகவும் அவரது டயட்டை உடைக்கும் விதமாக, ஹீரோ நிதின் மற்றும் இயக்குனர் வெங்கி அட்லுரி ஆகியோர் வைத்த பந்தயத்தில் கீர்த்தி தோற்றுவிட்டார் இதனை தொடர்ந்து தோற்றதற்கு தண்டனையாகத்தான் 10 சிட் அப்ஸ்கள் எடுத்தாராம் கீர்த்தி சுரேஷ்