உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மகாராஷ்டிராவில் தியேட்டர்கள் மூடல்

மகாராஷ்டிராவில் தியேட்டர்கள் மூடல்

கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. மும்பை உள்ளிட்ட மகாராஷ்டிர மாநிலம் முழுவதும் அதிக வேகத்துடன் பரவி வருகிறது. பல முன்னணி பாலிவுட் நடிகர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். பல படங்கள் தங்கள் வெளியீட்டை தள்ளி வைத்து வருகிறது.

இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் தற்போது வார இறுதியில் ஊடரங்கும், வார நாட்களில் இரவு நேர ஊரடங்கும் அமுலில் இருக்கிறது. தற்போது கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக மகாராஷ்டிர மாநிலம் முழுவதும் தியேட்டர்களை வருகிற ஏப்ரல் 30ந் தேதி வரை மூட அந்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. 30ந் தேதிக்கு பிறகு சூழ்நிலையை பொறுத்து முடிவெடுக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !