ராஷ்மிகா பிறந்த நாள்: அமிதாப்பச்சன் வாழ்த்து
தென்னிந்திய சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் நடிகை ராஷ்மிகா மந்தனா. சமீபத்தில் வெளியான சுல்தான் படம் மூலம் தமிழில் அறிமுகமானார். இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதால் மகிழ்ச்சியில் இருக்கிறார் ராஷ்மிகா.
தற்போது விகாஷ் பகத் இயக்கத்தில் ஹிதி படம் ஒன்றில் நடித்து வருகிறார் ராஷ்மிகா. அதில் அமிதாப் பச்சனுடன் நடித்து வருகிறார். நேற்று முன்தினம் (ஏப்ரல் 5) ராஷ்மிகாவுக்கு பிறந்த நாள். இதனை அவர் ஹிந்தி படத்தின் படப்பிடிப்பு தளத்திலேயே அமிதாப் பச்சனுடன் சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடினார். அவருக்கு அமிதாப் பச்சன் கேக் ஊட்டி பிறந்த நாள் வாழ்த்து கூறினார்.
பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது அமிதாப் பச்சனுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். 'அமிதாப் பச்சனுடன் சேர்ந்து பிறந்தநாளை கொண்டாடியதுதான் தனக்கு கிடைத்த மிகப்பெரிய பிறந்தநாள் பரிசு என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.