ஹாலிவுட் நடிகர் பால் ரிட்டர் திடீர் மரணம்
ADDED : 1724 days ago
பிரபல ஹாலிவுட் நடிகர் பால் ரிட்டர். ஹாரி பாட்டர் படங்களின் அனைத்து பாகத்திலும் எல்டிரட் வார்ப்பிள் என்ற வேடத்தில் நடித்துள்ளார். இதுதவிர ஜேம்ஸ் பாண்ட் படமான குவாண்டம் ஆப் சோலஸ் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். கடைசியாக பிரைடே நைட் டின்னர் என்ற தொலைக்காட்சி தொடரிலும் நடித்தார்.
54 வயதான பால் ரிட்டர் மூளையில் ஏற்பட்ட கட்டியால் அவதிப்பட்டு வந்துள்ளார். அதற்கு சிகிச்சை மேற்கொண்டு வந்த பால் சிகிச்சை பலன் இன்றி மரணம் அடைந்தார்.
இதுகுறித்து அவர் குடும்பத்தினர் வெளியிட்ட அறிக்கையில், பால் தனது வீட்டில் மனைவி பாலி மற்றும் மகன்கள் பிராங்க் மற்றும் நோவா ஆகியோர் உடனிருக்கும்பொழுது அமைதியான முறையில் உயிரிழந்தார் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.