ஓட்டுப்போட்ட கையோடு ஜார்ஜியா பறந்த விஜய்
ADDED : 1695 days ago
நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 65வது படத்தின் படப்பிடிப்பு தேர்தலுக்கு பிறகு ரஷ்யாவில் தொடங்கவிருப்பதாக செய்திகள் வெளியாகி வந்தன. அதையடுத்து சென்னையில நடைபெறயிருப்பதாக சொல்லப்பட்டது. ஆனால் இப்போது ஜார்ஜியாவில் நடக்க உள்ளது.
சென்னை நீலாங்கரையில் வசிக்கும் நடிகர் விஜய் நேற்று ஓட்டளிக்க சைக்கிளில் சென்று பரபரப்பை ஏற்படுத்தினார். இதனால் நேற்று சமூகவலைதளத்தில் அவர் அதிகளவில் டிரெண்ட் ஆனார். இந்நிலையில் ஓட்டு போட்ட கையோடு ஜார்ஜியா புறப்பட்டு சென்றார் விஜய். சென்னை விமான நிலையத்தில் விஜய் இருக்கும் போட்டோ சமூகவலைதளத்தில் வைரலானது.
விஜய் 65வது படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் இரண்டு வாரங்கள் நடக்கின்றன. அதை முடித்துவிட்டு சென்னையில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பை துவங்குகின்றனர். இதையடுத்தே ரஷ்யா சென்று படமாக்க உள்ளனர்.