உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஜூலையில் திரிஷ்யம்-2 தெலுங்கு ரீமேக் ரிலீஸ்

ஜூலையில் திரிஷ்யம்-2 தெலுங்கு ரீமேக் ரிலீஸ்

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மலையாளத்தில் வெளியான திரிஷ்யம் படத்தின் இரண்டு பாகங்களிலும் மோகன்லால் - மீனா நடித்திருந்தனர். அதேபோல் இந்த படத்தின் தெலுங்கு ரீமேக்கிலும் முதல் பாகத்தில் நடித்த வெங்கடேஷ் - மீனாவே இரண்டாம் பாகத்திலும் நடித்து வருகிறார்கள். அவர்களுடன் நதியா, கிருத்திகா, எஸ்தர் அனில் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஜீத்து ஜோசப்பே இயக்குகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அடுத்த மாதத்திற்குள் படப்பிடிப்பு முடிந்துவிடும் என்கிறார்கள். அதன்பின் மற்ற பணிகளை ஆரம்பித்து ஜூலை மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !