உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மீண்டும் விஜய் படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்கிறார் பிரபுதேவா?

மீண்டும் விஜய் படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்கிறார் பிரபுதேவா?

லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாநகரம் படத்தை ஹிந்தியில் மும்பைகார் என்ற பெயரில் சந்தோஷ் சிவன் ரீமேக் செய்து வரும் நிலையில், அடுத்தபடியாக லோகேஷ் கனகராஜ் விஜய்யை வைத்து இயக்கிய மாஸ்டர் படமும் ஹிந்தியில் ரீமேக் ஆக இருப்பதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது.

ஏற்கனவே விஜய் நடித்த போக்கிரி படத்தை சல்மான்கானை வைத்து வான்டட் என்ற பெயரிலும், கார்த்தி நடித்த சிறுத்தை படத்தை அக்சய் குமாரை வைத்து ரவுடி ரத்தோர் என்ற பெயரிலும் ரீமேக் செய்த பிரபுதேவாவே மாஸ்டர் படத்தையும் சல்மான் கானை வைத்து ஹிந்தியில் ரீமேக் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும், சல்மான்கான் நடிப்பில் தபாங்-3 படத்தை அடுத்து தற்போது ராதே என்ற படத்தை இயக்கி வரும் பிரபுதேவா, இதன்பிறகு மாஸ்டர் ஹிந்தி ரீமேக்கை அவரை வைத்து இயக்குகிறாராம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !