தமிழ் புத்தாண்டில் ஒளிபரப்பாகும் ஜி.வி.பிரகாஷ் படம்
கொரோனா காலம் முன்பு வரை படங்கள் தியேட்டரில் மட்டுமே வெளியானது. கொரோனா காலத்தில் ஓடிடி தளங்களில் வெளியானது. தற்போது ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு தியேட்டர், ஓடிடி இரண்டிலும் வெளிவருகிறது. இதற்கிடையில் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பாகும் படங்களும் அதிகரித்துள்ளது.
ஏலே, புலிக்குத்தி பாண்டி, மண்டேலா படங்கள் சமீபத்தில் வெளிவந்தன. இதை தொடர்ந்து தற்போது ஜி.வி.பிரகாஷ், அமிர்தா நாயர் நடித்துள்ள வணக்கம்டா மாப்ளே படம் சின்னத்திரையில் வெளியாகிறது. வருகிற தமிழ் புத்தாண்டு தினத்தில் முன்னணி தொலைக்காட்சி ஒன்றில் வெளிவருகிறது.
இதனை ராஜேஷ்.எம் இயக்கி இருக்கிறார். கடவுள் இருக்கான் குமாரு படத்திற்கு பிறகு ராஜேசும், ஜி.பி.பிரகாசும் இணைந்திருக்கும் படம் இது. டேனியல் போப், ஆனந்த்ராஜ், ஜெயபிரகாஷ், பிரகதி, சவுந்தர்யா நந்தகுமார் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். கல்யாண வீட்டில் மாப்பிள்ளையின் நண்பர்கள் செய்யும் அலப்பறைளை காமெடியாக தரும் படம்.