சினிமாவில் வில்லன், நிஜத்தில் ஹீரோ
ADDED : 1689 days ago
இசையமைப்பாளர் பிரதீப் வர்மா நாயகனாக நடிக்கும் படம் 'ஓட்டம்'. மாடல் அழகி ஐஸ்வர்யா நாயகியாக நடிக்கிறார். சாய் தீனா, அம்பானி சங்கர் உள்ளிட்ட பலர் நடிக்க, முருகன் இயக்குகிறார். படத்தின் பாடல் காட்சிக்கான உடைகளை வாங்கும்போது நாயகி ஐஸ்வர்யாவும் உடன் சென்றுள்ளார். பெங்களூருவில் ஷாப்பிங் மாலில் ஆடை வாங்கும்போது சில வாலிபர்கள் இவரை கேலி, கிண்டல் செய்துள்ளனர். அப்போது அங்கிருந்த இப்படத்தில் வில்லனாக நடித்து வரும் ரவிஷங்கர், அவர்களை தட்டிகேட்டுள்ளார். வாக்குவாதம் ஏற்பட ஒருக்கட்டத்தில் அந்த இளைஞர்களில் ஒருவனை ஓங்கி அறைந்துள்ளார் ரவிஷங்கர். “போயிடுறீங்களா, இல்லை போலீஸை வரவழைக்கவா” என அவர் கேட்க, அந்த இளைஞர்கள் ஓட்டம் பிடித்தனர். திரையில் வில்லனாக நடித்தாலும், நிஜத்தில் ஹீரோவாக தவறை தட்டிக்கேட்ட ரவியை பலரும் பாராட்டினர்.