ஜார்ஜியாவில் துவங்கியது விஜய் 65
ADDED : 1688 days ago
மாஸ்டர் படத்தை அடுத்து நெல்சன் திலீப்குமார் இயக்கும் தனது 65ஆவது படத்தில் நடிக்கிறார் விஜய். சட்டசபை தேர்தலில் ஓட்டளித்துவிட்டு இரு தினங்களுக்கு முன் ஜார்ஜியா பறந்தார் விஜய். இவரை தொடர்ந்து நாயகி பூஜா ஹெக்டேவும் அங்கு சென்றுள்ளார். இந்நிலையில் அங்கு படப்பிடிப்பு துவங்கி உள்ளது. படப்பிடிப்பு தளத்தில் விஜய்யும், நெல்சனும் நின்று கொண்டிருக்கும் போட்டோவை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதை விஜய் ரசிகர்கள் டிரெண்டிங் செய்கின்றனர்.