அமெரிக்காவில் கர்ணன் படம் பார்த்த தனுஷ்
ADDED : 1754 days ago
மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள கர்ணன் படம் கடந்த 9-ந்தேதி திரைக்கு வந்துள்ளது. ரசிகர்களிடம் பாசிடிவ்வான விமர்சனங்களை பெற்றிருப்பதால் படத்திற்கான வரவேற்பு அதிகரித்துள்ளது. அதோடு திரையுலக பிரபலங்களும் இந்த படத்தை பார்த்து விட்டு பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில், தற்போது தி கிரே மேன் ஹாலிவுட் படத்தில் நடிப்பதற்காக அமெரிக்காவில் முகாமிட்டுள்ள தனுஷ், ஏப்., லொ் லாஸ்ஏஞ்சல்ஸில் உள்ள தியேட்டரில் கர்ணன் படத்தின் சிறப்பு காட்சியை பார்த்து ரசித்திருக்கிறார். அமெரிக்க தியேட்டர்களிலும் 50 சதவிகித இருக்கைகளே அனுமதி என்றபோதும் அரங்கம் நிறைந்த காட்சியாக ஓடியதைக்கண்டு தான் மகிழ்ச்சியடைந்ததாகவும் தெரிவித்துள்ளார். இதனிடையே இப்படத்தை பார்த்துவிட்டு தான் நெகிழ்ந்து போனதாக தயாரிப்பாளர் தாணுவிடம் தெரிவித்துள்ளார்.