விஜய் சேதுபதியை சந்தித்த துருவ் விக்ரம்
ADDED : 1638 days ago
ஆதித்ய வர்மா படத்தில் அறிமுகமான விக்ரமின் மகன் துருவ் விக்ரம் தற்போது கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் விக்ரம் 60ஆவது படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் துருவிக் விக்ரம் நாயகனாகவும், விக்ரம் வில்லனாகவும் நடிப்பதாக கூறப்படுகிறது. அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இதையடுத்து மாரி செல்வராஜ் இயக்கும் அடுத்த படத்திலும் நடிக்கிறார் துருவ் விக்ரம். இந்நிலையில், தற்போது விஜய் சேதுபதியை தான் சந்தித்தபோது எடுத்த ஒரு செல்பியை தனது இணையத்தில் பகிர்ந்துள்ளார் துருவ் விக்ரம். அதோடு, இந்த அழகான மனிதரை சந்திப்பதில் எப்போதும் மகிழ்ச்சி என்றும் பதிவிட்டுள்ளார் துருவ்.