எப்-3யில் இணைந்த அஞ்சலி
ADDED : 1680 days ago
கடந்த வாரத்தில் வெளியான பவன் கல்யாணின் வக்கீல் சாப் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த அஞ்சலிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. முக்கியமாக அந்த படத்தை தயாரித்த தில்ராஜூவை தனது நடிப்பினால் வெகுவாக கவர்ந்து விட்டாராம் அஞ்சலி. அதன் காரணமாக தற்போது அனில் ரவிபுடி இயக்கத்தில் வெங்கடேஷ், வருண்தேஜ் நடிப்பில் தான் தயாரித்து வரும் எப்-3 என்ற படத்திற்கு அஞ்சலியை ஒப்பந்தம் செய்திருக்கிறார் தில்ராஜூ. இதே படத்தில் தமன்னா, மெஹ்ரீன் போன்ற நடிகைகள் நடித்து வரும் நிலையில், அஞ்சலியும் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அடுத்த வாரம் மைசூரில் நடக்கும் எப்-3 படப்பிடிப்பில் அவரும் கலந்து கொள்கிறார்.