அடுத்தடுத்த ஆண்டுகளில் மூவரை இழந்த தமிழ் சினிமா
ADDED : 1657 days ago
தமிழ்த் திரையுலகத்தில் சிலரது மறைவு தான் ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தி விடுகிறது. சினிமாவில் எத்தனையோ பேர் வரலாம், போகலாம் ஆனால், ஒரு சிலர் மட்டுமே மக்களின் மனதில் ஒரு இடத்தைப் பிடிக்க முடிகிறது. அந்த விதத்தில் மக்களின் மனங்களை வென்ற மூவர் அடுத்தடுத்த ஆண்டுகளில் மரணம் அடைந்தது தமிழ் சினிமாவுக்குப் பேரிழப்பாகும்.
2019ம் ஆண்டில் வசனகர்த்தா, நடிகர், நாடகக் கலைஞர் கிரேஸிமோகன், 2020ம் ஆண்டில் பாடகர், இசையமைப்பாளர், நடிகர் எஸ்பி பாலசுப்ரமணியம், இந்த 2021ம் ஆண்டில் நடிகர் விவேக் ஆகியோரது மறைவு சினிமாவை விரும்பிச் சென்றுப் பார்க்கும் ரசிகர்களையும், சினிமாவை நேசிக்கும் பல குடும்பத்தினரையும் வருத்தப்பட வைத்துள்ளது.
சமூக வலைத்தளங்களில் அவர்களது மறைவுக்காக பலரும் தங்களது ஆழ்ந்த இரங்கல் பதிவுகளைப் பதிவிடுவதே அதற்கு சாட்சி.