உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / விவேக்குடன் அறிமுகமான ரமேஷ் அரவிந்த் இரங்கல்

விவேக்குடன் அறிமுகமான ரமேஷ் அரவிந்த் இரங்கல்

கே.பாலசந்தர் இயக்கத்தில் 1987ம் ஆண்டு வெளிவந்த படம் 'மனதில் உறுதி வேண்டும்'. சுஹாசினி முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்த அந்தப் படத்தில் மற்ற நடிகர்கள், நடிகைகள் பெரும்பாலும் புதுமுகங்கள் தான்.

மறைந்த பின்னணிப் பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் கூட அப்படத்தில் தான் நடிகராக அறிமுகமானார். அப்படத்தில் தான் விவேக், ரமேஷ் அரவிந்த், நடிகர் பிரகாஷ்ராஜின் முதல் மனைவி லலிதகுமாரி, கன்னட நடிகர் ஸ்ரீதர், நடிகை ஸ்ரீப்ரியாவின் தம்பி சந்திரகாந்த் உள்ளிட்டவர்கள் அறிமுகமானார்கள்.

அப்படத்தில் விவேக், ரமேஷ் அரவிந்த் இருவரும் சகோதரர்களாக நடித்திருப்பார்கள். ரமேஷ் அரவிந்த் தற்போது கன்னடத் திரையுலகில் இயக்குனராகவும் பல வெற்றிகளைக் கொடுத்த சீனியர் நடிகராகவும் உள்ளார்.தன்னுடன் அறிமுகமான விவேக் மறைவு குறித்து அவர் தெரிவித்துள்ள இரங்கலில், “ஆழ்ந்த இரங்கல் விவேக், புத்திசாலித்தனத்துடன் கூடிய அவருடைய நகைச்சுவை மிகவும் அரிதான ஒன்று. தமிழில் எங்கள் இருவருக்கும் முதல் படமான 'மனதில் உறுதி வேண்டும்' படத்தை நினைத்துப் பார்க்கிறேன்,” என்று குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !