உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நடிகர் பிரித்விராஜின் தார்யா ஹிந்தி படப்பிடிப்பு நிறைவு

நடிகர் பிரித்விராஜின் தார்யா ஹிந்தி படப்பிடிப்பு நிறைவு

மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் பிரித்விராஜ் ஒரு இயக்குனராகவும் மாறி தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வருகிறார். இன்னொரு பக்கம் தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார். அந்த வகையில் கடந்த வருடம் தெலுங்கில் சலார் படத்திலும் ஹிந்தியில் படே மியான் சோட்டே மியான் படத்திலும் வில்லனாக நடித்தார் பிரித்விராஜ். இந்த நிலையில் தற்போது ஹிந்தியில் தயாராகி வரும் தார்யா என்கிற படத்தில் கதாநாயகனாக ஒரு போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இதில் கதாநாயகியாக கரீனா கபூர் நடித்துள்ளார். ராசி, தல்வார், சாம் பகதூர் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் மேக்னா குல்சார் இயக்குகிறார். ஜங்கில் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

இது குறித்த தகவலை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ள நடிகர் பிரித்விராஜ், “இத்தனை நாட்கள் படப்பிடிப்பு தளத்தில் நாங்கள் வாழ்ந்து வந்த ஒரு கதை, விரைவில் ரசிகர்களுக்காக திரையில் வர இருக்கிறது/. 2026 திரையரங்குகளில் சந்திப்போம்” என்று கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !