'தி பெட்' படம், ஹீரோ ஸ்ரீகாந்த், ஹீரோயின் சிருஷ்டி புறக்கணிப்பு
மணிபாரதி இயக்கத்தில் ஸ்ரீகாந்த், சிருஷ்டி டாங்கே நடித்த 'தி பெட்' என்ற படம், நாளை மறுநாள் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் ஸ்ரீகாந்த் பங்கேற்கவில்லை. ஹீரோயின் சிருஷ்டியும் வரவில்லை. இது குறித்து இயக்குனரிடம் கேட்டால், அவர் குடும்பத்துடன் வெளிநாடு டூர் போய் இருப்பதால் வர முடியவில்லை என்றார். சிருஷ்டி குறித்து கேட்டபோது அவருக்கான சம்பளத்தை கொடுத்துவிட்டோம். ஆனாலும் ஏனோ படம் குறித்து பேசவில்லை என்றார்.
இந்த படம் சில ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்டது. படத்தின் கதையும் கொஞ்சம் கிளுகிளுப்பானது. அதனால் இவர்கள் இருவரும் தி பெட் படத்தை புறக்கணித்துவிட்டார்கள் என்று கூறப்படுகிறது. போதை மருந்து விவகாரத்தில் சிக்கியப்பின் சினிமா நிகழ்ச்சிகளில் ஸ்ரீகாந்த் கலந்து கொள்வது இல்லை. தான் நடித்த 'பிளாக்மெயில்' பட விழாவுக்கும் அவர் வரவில்லை.