உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / விவாகரத்துக்கு பிறகும் ஒற்றுமையாக வலம் வரும் பிரியதர்ஷன் லிசி தம்பதி

விவாகரத்துக்கு பிறகும் ஒற்றுமையாக வலம் வரும் பிரியதர்ஷன் லிசி தம்பதி

பிரபல மலையாள திரைப்பட இயக்குனர் பிரியதர்ஷன். டைரக்ஷனில் கிட்டத்தட்ட நூறு படங்களை தொட இருக்கிறார். இவரது மனைவி நடிகை லிசி. இருவரும் 1990ல் காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு சித்தார்த் என்கிற மகனும் கல்யாணி என்கிற மகளும் இருக்கின்றனர். கல்யாணி தற்போது இளம் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். 2016ல் பிரியதர்ஷன், லிசி இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்கின்றனர்.

ஆனால் இதுவரை ஒருவரை ஒருவர் எங்கேயும் குறை கூறிக்கொண்டது இல்லை. 2023ல் இவர்களது மகன் சித்தார்த் திருமணம் நடைபெற்ற போது தம்பதியினர் ஒன்றாக அந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். சமீபத்தில் பிரபல மலையாள இயக்குனர் சிபி மலயில் மகன் ஜோவின் திருமணத்தில் இவர்கள் இருவரும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கு இவர்கள் இருவரும் ஒரே காரில் வந்து இறங்கியது பலரையும் ஆச்சரியப்படுத்தியது.

அது மட்டுமல்ல இவர்கள் இருவரையுமே ஒன்றாக மேடை ஏறி வரச் செய்து மணமக்களை வாழ்த்த செய்தார் இயக்குனர் சிபி மலயில். மேடையை விட்டு இறங்கி செல்லும்போது பிரியதர்ஷினின் கையைப் பிடித்துக் கொண்டே லிசி இறங்கி சென்ற காட்சி அங்கிருந்தவர்களை ஆச்சரியமும் சந்தோஷமும் படுத்தியது. விவாகரத்திற்கு பிறகும் கூட ஒற்றுமையாக வலம் வரும் இந்த நட்சத்திர தம்பதியினர் உண்மையிலேயே ஆச்சரியத்திற்கு உரியவர்கள்தான்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !