உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / திரிஷ்யம் முதல் பாகத்தின் பார்முலாவில் உருவாகும் 3ம் பாகம் : ஜீத்து ஜோசப் தகவல்

திரிஷ்யம் முதல் பாகத்தின் பார்முலாவில் உருவாகும் 3ம் பாகம் : ஜீத்து ஜோசப் தகவல்

மலையாளத்தில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான திரிஷ்யம் படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகமும் திரிஷ்யம் 2 என்கிற பெயரில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதனை தொடர்ந்து தற்போது திரிஷ்யம் 3 படப்பிடிப்பு துவங்கி முடிவடைந்து போஸ்ட் புரொடக் ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. வரும் சம்மர் விடுமுறைக்கு இந்த படம் வெளியாக இருக்கிறது.

இந்த மூன்றாம் பாகம் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் இயக்குனர் ஜீத்து ஜோசப் கூறும்போது, “இந்த மூன்றாம் பாகம் முதல் பாகத்தின் பார்முலாவிலேயே உருவாக்கப்பட்டுள்ளது. இரண்டாம் பாகம் ஒரு கதை சொல்லும் பாணியில் நகர்த்தி செல்லப்பட்டது. ஆனால் முதல் பாகத்தில் நிகழ்வுகள் மட்டுமே சொல்லப்பட்டன. அதே பார்முலாவில் தான் இந்த மூன்றாம் பாகமும் உருவாகி வருகிறது. முதல் பாகத்தை விட இன்னும் கூடுதல் எமோஷனாக இந்த மூன்றாம் பாகம் இருக்கும். இரண்டு பாகங்களில் நடந்ததை விட நாயகன் ஜார்ஜ் குட்டியின் குடும்பத்தில் வேறு என்ன நடந்துவிட முடியும் என்பதை தான் இந்த படத்தில் காட்டி இருக்கிறோம்” என்று கூறியுள்ளார் இயக்குனர் ஜீத்து ஜோசப்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !