முகம் வீங்கிப்போன ரைசா - ஏன் என்னாச்சு?
ADDED : 1645 days ago
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர் நடிகை ரைசா வில்சன். வேலையில்லா பட்டதாரி, பியார் பிரேமா காதல் போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது சில படங்களில் நாயகியாக நடித்து வருகிறார். சமூகவலைதளத்தில் ஆக்டிவ்வாக இருக்கும் இப்போது முகம் வீங்கியபடி போட்டோவை ஒன்றை பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ‛‛சமீபத்தில் அழகுக்காக முகத்தில் பேசியல் செய்ய அழகுகலை மருத்துவரிடம் சென்றதாகவும், அங்கு அவர்கள் தேவையற்ற சில ஒப்பனைகளை செய்ததால் தனது முகம் ஒரு பக்கம் வீங்கி விட்டதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் இதுப்பற்றி அந்த நபரை தொடர்பு கொள்ள முயற்சித்ததாகவும், ஆனால் அவர் தன்னை சந்திக்கவும், பேசவும் மறுப்பதாகவும் குற்றம் சாட்டி உள்ளார்.
இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.