உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கொரோனா இரண்டாவது அலை : படப்பிடிப்பில் கலந்து கொள்ள ஜெகபதிபாபு மறுப்பு

கொரோனா இரண்டாவது அலை : படப்பிடிப்பில் கலந்து கொள்ள ஜெகபதிபாபு மறுப்பு

கொரோனா இரண்டாவது அலை கடந்த ஆண்டை விட தீவிரமாக பரவிக்கொண்டு வருவதால் சினிமாத் துறையினர் முன்பை விட அதிகமானோர் நோய் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். இந்த நிலையில், தான் கமிட்டான படங்களில் தொடர்ந்து நடிப்பதற்கு தெலுங்கு நடிகர் ஜெகபதிபாபு மறுத்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தற்போது தமிழில் லாபம் படத்தில் நடித்து முடித்துள்ள ஜெகபதிபாபு, ரஜினியுடன் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கில் அரை டஜன் படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில், சித்தார்த்-சர்வானந்த் நடிப்பில் தமிழ் தெலுங்கில் தயாராகி வரும் மகாசமுத்ரம் படத்தில் வில்லனாக நடித்து வந்தார் ஜெகபதிபாபு.

ஆனால் தற்போது அப்படத்தின் படப்பிடிப்பு வைசாக்கில் நடந்து வரும் நிலையில், தன்னை படப்பிடிப்பில் கலந்து கொள்ள அழைத்தபோது கொரோனா தொற்றை முன்வைத்து படப்பிடிப்பில் கலந்து கொள்ள முடியாது என்று தயாரிப்பாளர்களின் கோரிக்கை நிராகரித்து விட்டாராம் ஜெகபதிபாபு. அதேபோல் தான் நடிக்கும் மற்ற படங்களின் படப்பிடிப்புகளிலும் கொரோனா அலை ஓய்ந்த பிறகே நடிப்பேன் என்றும் ஜெகபதிபாபு கூறிவிட்டதாக டோலிவுட்டில் செய்திகள் வெளியாகியுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !