உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அரசியல் ரசிகர்களுக்கு மே 2 : அஜித் ரசிகர்களுக்கு மே 1

அரசியல் ரசிகர்களுக்கு மே 2 : அஜித் ரசிகர்களுக்கு மே 1

'வலிமை அப்டேட்' இந்த வார்த்தைகள் பரவாத இடங்களே என்று சொல்லுமளவிற்கு கடந்த சில மாதங்களாக பரபரப்பை ஏற்படுத்தியது. வினோத் இயக்கத்தில் யுவன் இசையில் அஜித் நடித்து வரும் படம்தான் 'வலிமை'.

படக்குழுவினர் படத்தைப் பற்றிய அப்டேட்களை அடிக்கடி கொடுக்கவில்லை என ரசிகர்கள் நிறையவே குறைபட்டார்கள். பிரதமர் வருகை, இந்தியா, இங்கிலாந்து கிரிக்கெட் போட்டிகளில் கூட 'வலிமை அப்டேட்' குரல் ஒலித்தது. ரசிகர்களின் அத்து மீறல் அதிகமானதைத் தொடர்ந்து அஜித் அறிக்கை விடும் அளவிற்குப் போனது.

மே 1ம் தேதி 'வலிமை' பற்றிய அப்டேட் நிச்சயம் வரும் என படக்குழு அறிவித்தார்கள். இன்னும் பத்து நாட்களில் அந்த தினம் வந்துவிடும். அதற்கு மறுநாள் மே 2ம் தேதி தமிழ்நாடு சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளது. அது அரசியல் ரசிகர்களுக்கான தினம் என்றால் மே 1 அஜித் ரசிகர்களுக்கான தினம்.

அன்று வலிமை அப்டேட், மற்றும் அஜித்தின் பிறந்த தினம் என டபுள் கொண்டாட்டத்திற்கு இப்போதே தயாராகி வருகிறார்கள் அஜித் ரசிகர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !