இஸ்லாமியர்களை பற்றி பேசும் படம்
ADDED : 1678 days ago
சிறந்த இயக்குனர் மற்றும் சிறந்த நடிகை உள்ளிட்ட ஏழு சர்வதேச திரைப்பட விருதுகளை வென்ற இன்ஷா அல்லாஹ் படம் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தியேட்டரில் வெளியாக உள்ளது. படத்தின் இயக்குனர் சீர்காட்சி பக்கிள் பாண்டியன் பாஸ்கரன் அளித்த பேட்டி:
தமிழ் திரையுலகில் இஸ்லாமியர்களை பற்றி ஒரு படம் கூட வரவில்லை. இஸ்லாமியர்களின் வாழ்வியலை படமாக்க நினைத்தேன். இதற்காக ஒரு மசூதியில் ஆறு மாதம் தங்கியிருந்தேன். அவர்களுடனேயே பயணித்தேன். இன்ஷா அல்லாஹ் என்பது இறைவன் விரும்பினால் என பொருளாகும்.
மறைந்த தோப்பில் முகம்மது மீரான் மற்றும் பிர்தவுஸ் ராஜகுமாரன் எழுதிய சிறுகதையை இணைந்து இப்படத்தின் திரைக்கதையை உருவாக்கியுள்ளேன். நாயகனாக மோக்லி கே.மோகன் நடிக்க, நாயகியாக மேனகா அறிமுகமாகிறார். இந்தோனேசியாவில் நடந்த உபுட் சர்வதேச திரைப்பட விழாவில், இப்படத்திற்காக சிறந்த நடிகை விருது பெற்றார். படத்தில் லைவ் ஆடியோவே இடம் பெற்றுள்ளது. இசை கிடையாது. மே 14ம் தேதி படம் வெளியாகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.