உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தயாரிப்பு நிறுவனம் தொடங்கினார் துப்பாக்கி வில்லன்

தயாரிப்பு நிறுவனம் தொடங்கினார் துப்பாக்கி வில்லன்

துப்பாக்கி படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்து தமிழ் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றவர் பாலிவுட் நடிகர் வித்யுத் ஜாம்வால்.. அந்த வருடத்திலேயே பில்லா-2 படத்திலும் அஜித்துக்கு வில்லனாக நடித்தார். பின் சூர்யாவுக்கு நண்பனாக அஞ்சான் படத்தில் நடித்தார். தெலுங்கில் ஜூனியர் என்டிஆர் நடித்த சக்தி என்கிற படத்தில் அறிமுகமான வித்யுத் ஜாம்வால், தனது திரையுலக பயணத்தில் பத்து வருடங்களை கடந்துவிட்டார்.

தற்போது திரையுலகில் தனது அடுத்த கட்ட நகர்வாக தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ளார் வித்யுத் ஜாம்வால். ஆக்சன் ஹீரோ பிலிம் என்கிற தயாரிப்பு நிறுவனத்தை துவங்கியுள்ள இவர், தயாரிப்பாளரும் தனது நண்பருமான அப்பாஸ் சய்யத் என்பவருடன் இணைந்து படங்களை தயாரிக்க உள்ளார். இதுபற்றி வித்யுத் ஜாம்வால் கூறும்போது, “சினிமாவில் பத்து வருடங்கள் என்கிற மைல்கல்லை கடந்துவிட்டேன்.. இந்த தருணத்தில் தயாரிப்பு நிறுவனம் துவங்குவதை உங்களிடம் பெருமையுடன் பகிர்ந்துகொள்கிறேன்” என கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !