விவேக் கனவை நனவாக்கும் ஆத்மிகா
ADDED : 1649 days ago
மறைந்த நடிகர் விவேக்கின் பசுமை இந்தியா திட்டமான ஒரு கோடி மரக்கன்று நடும் திட்டத்தை பொதுமக்கள் உடன் திரையுலகினர் பலரும் முன்னெடுத்துள்ளனர். நடிகை ஆத்மிகா டுவிட்டரில், ‛‛விவேக் அவர்களின் நினைவாக எனது வீட்டில் சில மரக்கன்றுகளை நட்டுள்ளேன். என்னால் இயன்ற இடங்களில் எல்லாம் இந்த பணியைச் செய்ய முடிவு செய்துள்ளேன். அவர் விட்டுச்சென்ற ஒரு கோடி மரங்கள் நடுவது என்ற அவரின் மகத்தானக் கனவை நாம் அனைவரும் சேர்ந்து நிறைவேற்றுவோம்'' என பதிவிட்டு தான் நட்ட மரக்கன்றுகளின் போட்டோவையும் பகிர்ந்துள்ளார்.