கமல் கட்சியிலிருந்து நாசர் மனைவி விலகல்
ADDED : 1680 days ago
நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம் கட்சியில் இணைந்து அரசியல் பணிகள் செய்து வந்தார் நடிகர் நாசரின் மனைவியும், தயாரிப்பாளருமான கமீலா. இந்நிலையில் இக்கட்சியிலிருந்து விலகி உள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் விலகுவதாக மக்கள் நீதி மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் கமீலா நாசர் வெளியிட்ட அறிக்கை : என் சொந்த பணிகள் காரணம் கருதி, மக்கள் நீதி மையம் கட்சியிலிருந்து விலகுகிறேன். இந்த நேரத்தில் அரசியல் அட்சரம் கற்று தந்த ஆசான் கமல்ஹாசன் மற்றும் என்னுடன் சேர்ந்து பணியாற்றிய அனைவருக்கும் எனது நன்றி. என்னோடு பயணித்த கட்சி தொண்டர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள். இந்த பயணத்தில் கிடைத்த அனுபவத்தை என் வாழ்நாள் பொக்கிஷமாக கருதி விடைபெறுகிறேன்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.