ஹிந்திக்கு செல்லும் அனிருத்
ADDED : 1631 days ago
தனுஷ் நடித்த 3 படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமான அனிருத், அந்த படத்தில் இசையமைத்திருந்த ஒய்திஸ் கொலவெறி என்ற பாடல் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். அதையடுத்து வேகமாக வளர்ந்து விட்டவர், தமிழ், தெலுங்கில் அதிகமாக இசையமைத்து வருபவர், ஹிந்தியில் 2013ல் விக்ரம் நடித்திருந்த டேவிட் என்ற படத்திற்கு ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் இசையமைத்தார். அதன்பிறகு ஹிந்தி படங்களுக்கு இசையமைக்கவில்லை.
இந்த நிலையில் தனுஷ் நடிப்பில் ராஞ்சனா படத்தை அடுத்து தற்போது அட்ராங்கிரே என்ற படத்தை இயக்கியுள்ள ஆனந்த் எல்.ராய் இயக்கும் புதிய படத்தில் இசையமைக்க அனிருத் கமிட்டாகியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அக்சய்குமார் இதில் ஹீரோவாக நடிக்க உள்ளாராம். இதன் மூலம் முதன்முறையாக ஒரு முழுநீள ஹிந்தி படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார்.