மீண்டும் இணையும் கர்ணன் கூட்டணி
ADDED : 1627 days ago
மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்து சமீபத்தில் வெளியான படம் ‛கர்ணன்'. இப்படத்திற்கு ஒரு பக்கம் சிறப்பான வரவேற்பு கிடைத்திருப்பதுடன் படத்தின் வசூலும் நன்றாக இருந்தது. அதேசமயம் மற்றொரு தரப்பில் இப்படம் சாதிய ரீதியான விமர்சனங்களையும் சந்தித்தது. இந்நிலையில் மீண்டும் மாரி செல்வராஜ் உடன் ஒரு படத்தில் நடிக்கிறார் தனுஷ். இதற்கான அறிவிப்பை அவரே வெளியிட்டுள்ளார்.
இதுப்பற்றி டுவிட்டரில், ‛‛கர்ணன் பட வெற்றியை தொடர்ந்து மீண்டும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறேன். பீரி-புரொடக்ஷன் பணிகள் துவங்கி உள்ளன. அடுத்தாண்டு படப்பிடிப்பு துவங்கும்'' என தனுஷ் தெரிவித்துள்ளார்.