உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தீயணைப்பு துறை பற்றி டாக்குமெண்டரி படம் இயக்கிய ஹிப் ஹாப் ஆதி

தீயணைப்பு துறை பற்றி டாக்குமெண்டரி படம் இயக்கிய ஹிப் ஹாப் ஆதி

இசை அமைப்பாளர், இயக்குனர் மற்றும் நடிகராக ஹிப் ஹாப் தமிழா ஆதி சினிமாவை தவிர வேறு சில சமூக பணிகளையும் செய்து வருகிறார். ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது அவரது பங்கு முக்கியமாக இருந்தது. ஜல்லிக்கட்டு தொடர்பான ஆல்பங்களை வெளியிட்டார். தற்போது தமிழ்நாடு தீயணைப்புத்துறை கேட்டுக் கொண்டதற்கு இணங்க அந்த துறை பற்றிய டாக்குமெண்டரி படம் ஒன்றை இயக்கி உள்ளார். அதற்கு தீவீரன் என்று டைட்டில் வைத்துள்ளார்.

3 ஆண்டுகளாக ஆய்வு செய்து, உழைத்து இதனை உருவாக்கி உள்ளார். தீயணைப்புத் துறை வீரர்களின் தியாகம், அவர்களின் பணி முறை, குடும்ப சூழ்நிலை உள்ளிட்ட பல விஷயங்கள் இந்த டாக்குமெண்டரியில் இடம் பெற்றுள்ளது. தீயணைப்புத் துறை உயர் அதிகாரிகளின் பேட்டி, தீயணைப்பின்போது உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களின் நிலை போன்றவையும் இந்த டாக்குமெண்டரியில் இடம்பெற்றுள்ளது. இதனை இசை அமைத்து இயக்கி உள்ளார் ஆதி. அருண்ராஜா ஒளிப்பதிவு செய்துள்ளார். தற்போது இந்த டாக்குமெண்டரி யூ டியூப்பில் வெளியிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !