தடையில்லாமல் தொடரும் புஷ்பா படப்பிடிப்பு
அல்லு அர்ஜுன் தற்போது தெலுங்கில் நடித்து வரும் படம் புஷ்பா. ஐந்து மொழிகளில் வெளியாகும் விதமாக தயாராகி வரும் இந்தப்படத்தை இயக்குனர் சுகுமார் இயக்குகிறார். ராஷ்மிகா கதாநாயகியாக, பஹத் பாசில் வில்லனாக நடிக்கும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது..
ஏற்கனவே கொரோனா இரண்டாவது அலை காரணமாக, மகேஷ்பாபு மற்றும் ராம்சரண்-சிரஞ்சீவி நடிக்கும் படங்களின் படக்குழுவினரில் சிலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் புஷ்பா படக்குழுவினர் இன்னும் கொரோனா பாதிப்பு எதையும் சந்திக்கவில்லை என்பதால் படப்பிடிப்பு எந்த தடையுமின்றி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்தப்படத்தில் ராஷ்மிகா தவிர, இன்னொரு முக்கியமான வேடத்தில் நடிக்கும் நடிகை அனசுயா, இரண்டு தினங்களுக்கு முன்புதான் இந்தப்படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்து வருகிறார். படப்பிடிப்பு தளத்தில் இருந்து புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டு அதை உறுதிப்படுத்தியும் உள்ளார்.