திரிஷாவின் மற்றுமொரு படமும் ஓடிடி ரிலீஸ்
ADDED : 1689 days ago
திரிஷா நடித்துள்ள ‛சதுரங்க வேட்டை 2 , பரமபத விளையாட்டு, ராங்கி, கர்ஜணை' உள்ளிட்ட படங்கள் ரிலீஸ் ஆகாமல் முடங்கி கிடக்கின்றன. இவற்றில் பரமபத விளையாட்டு சமீபத்தில் ஓடிடியில் வெளியானது. இந்நிலையில் ‛ராங்கி' படத்தையும் ஓடிடியில் வெளியிடும் பணி நடக்கிறது. சரவணன் இயக்கி உள்ள இப்படத்தை லைகா தயாரித்துள்ளது. ஏற்கனவே இப்படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்றது. இப்படத்தில் ஆக் ஷன் காட்சிகளில் ரிஸ்க் எடுத்து நடித்துள்ளார் திரிஷா. நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இப்படம் திரில்லர் பாணியில் தயாராகி உள்ளது.