உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 2021 ஆஸ்கர் விருதுகள் அறிவிப்பு - சீன பெண் சிறந்த இயக்குனர்

2021 ஆஸ்கர் விருதுகள் அறிவிப்பு - சீன பெண் சிறந்த இயக்குனர்

சினிமா துறையில் மிக உயர்ந்த விருதாக கருதப்படுவது ஆஸ்கர். ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் அமெரிக்காவில் நடக்கும். கொரோனா பிரச்னையால் இந்தாண்டு நடக்கும் 93-வது ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சி இரண்டு மாதங்கள் தள்ளிப்போய் இன்று(ஏப்.,26) நடைபெற்றது. இவ்விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, தகுந்த பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு விழா நடந்தது.

சீன பெண் சிறந்த இயக்குனர்
சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கர் விருதை நோமெட்லெண்ட் படத்திற்காக சீன பெண் இயக்குனர் குளோயி சாவ் என்பவர் வென்றார். ஆஸ்கர் வரலாற்றில் சிறந்த பெண் இயக்குனருக்கான ஆஸ்கர் விருதை பெறும் இரண்டாவது பெண் இவர் ஆவார். இதற்கு கடந்த 2010ல் கேத்ரின் பிக்லோ என்பவர் ‛தி ஹர்ட் லாக்கர் என்ற படத்திற்காக வென்றார்.

சிறந்த படத்திற்கான ஆஸ்கர் விருது ‛நோமெட்லெண்ட் -ற்கு கிடைத்தது. சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருது இப்படத்தில் நடித்த பிரான்சிஸ் மெக்டார்மேண்ட் என்பவர் பெற்றார்.


சிறந்த துணை நடிகர் - டேனியல் கலுயா



2021 ஆஸ்கர் விருதுகள் விபரம்...

* சிறந்த படம் : நோமேட்லேண்ட்

* சிறந்த நடிகர் : ஆண்டனி ஹாப்கின்ஸ் (படம் : தி பாதர்)

* சிறந்த நடிகை : பிரான்சிஸ் மெக்டார்மேண்ட் (படம் : நோமேட்லேண்ட்)

* சிறந்த இயக்குநர் - குளோயி சாவ் (நோமேட்லேண்ட் என்ற திரைப்படத்திற்காக)

* சிறந்த துணை நடிகர் - டேனியல் கலுயா (படம் : யூதாஸ் அண்ட் பிளாக்மிசியா)


சிறந்த துணை நடிகை - யூ ஜூங் யான்



* சிறந்த துணை நடிகை - யூ ஜூங் யான் (படம் : மின்னாரி)

* சிறந்த திரைக்கதை - பிராமிசிங் யங் உமன்

* சிறந்த தழுவல் திரைக்கதை - ஃபாதர்

* சிறந்த ஆடை வடிவமைப்பு - ஆன் ராத் (மா ரெய்னீஸ் பிளாக் பாட்டம் திரைப்படத்திற்காக)

* சிறந்த வெளிநாட்டு திரைப்படம் - அனதர் ரவுண்ட் (டென்மார்க்)

* சிறந்த ஒப்பனை மற்றும் சிகை அலங்காரம் - செர்ஜியோ லோபஸ் நிவேரா, மியா நில், ஜமிகா வில்சன்

* சிறந்த அனிமேஷன் குறும்படம் - இப் எனிதிங் ஹேப்பன்ஸ் ஐ லவ் யூ

* லைவ் ஆக்ஷன் குறும்படம் - ட்ரூ டிஸ்டேண்ட் ஸ்ட்ரேஞ்சர்

* முழுநீள அனிமேஷன் படம் - சோல்

* சிறந்த ஒலி அமைப்பு - சவுண்ட் ஆப் மெட்டல்

* சிறந்த விஷுவல் எபக்ட்ஸ் - கிறிஸ்டோபர் நோலனின் ‛டெனன்ட் படம் வென்றது.

சிறந்த பாடல் : பைட் பார் யூ (படம் : யூதாஸ் அண்ட் பிளாக்மிசியா)

சிறந்த இசை - சோல் (இசையமைப்பாளர்கள் : டிரன்ட் ரெஸ்னார், ஆட்டியஸ் ராஸ் மற்றும் ஜான் படிஸ்சே)

சிறந்த படத்தொகுப்பு - சவுண்ட் ஆப் மெட்டல் (மிக்கல் நீல்சென்)

சிறந்த ஒளிப்பதிவு - எரிக் மெசர்சிமிட் (படம் : மான்க்)

சிறந்த தயாரிப்பு நிர்வாகம் - டொணால்டு கிரஹாம் பர்ட் மற்றும் ஜான் பாஸ்கர் தயாரிப்பு நிறுவனங்கள் (படம் : மான்க்)


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !