உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அல்லு அர்ஜுனைப் பாராட்டிய சல்மான்

அல்லு அர்ஜுனைப் பாராட்டிய சல்மான்

பிரபுதேவா இயக்கத்தில் சல்மான்கான், திஷா பதானி மற்றும் பலர் நடிக்கும் படம் 'ராதே'. இப்படத்தில் இடம் பெற்றுள்ள 'சீட்டிமார்' பாடலின் வீடியோவை இன்று யு டியுபில் வெளியிட்டுள்ளார்கள்.

தெலுங்கில் 'துவ்வடா ஜகன்னாதம்' படத்தில் தேவிஸ்ரீபிரசாத் இசையமைப்பில், அல்லு அர்ஜுன், பூஜா ஹெக்டே நடனமாடிய 'சீட்டிமார்' பாடலைத்தான் 'ராதே' படத்திற்காக மறு உருவாக்கம் செய்துள்ளனர். ஹிந்தி சீட்டிமார் பாடலில் சல்மான் கான், திஷா பதானி ஆகியோர் நடனமாடியுள்ளனர்.

ஆனால், ஒரினல் தெலுங்கு சீட்டிமார் அளவிற்கு இந்த ஹிந்தி சீட்டிமார் இல்லையென ரசிகர்கள் கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர். தென்னிந்தியத் திரையுலகத்தில் தனது அற்புதமான நடன அசைவுகளால் அதிகம் பாராட்டப்படுபவர் அல்லு அர்ஜுன் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று தனது 'சீட்டிமார்' பாடலை டுவிட்டரில் பதிவிட்டு அல்லு அர்ஜுனைப் பாராட்டியுள்ளார் சல்மான்கான். “இந்த 'சீட்டிமார்' பாடலில் உங்களது நடனத்தைக் கண்டு நிச்சயமாக ரசித்தேன், நன்றி அல்லு அர்ஜுன். உங்களது நடனம், ஸ்டைல், சிம்ப்ளி பன்டாஸ்டிக், கவனமாகவும் பாதுகாப்பாகவும் இருங்கள், உங்கள் குடும்பத்திற்கும் அன்புகள், உங்களை நேசிக்கிறேன் பிரதர்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !