உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அல்லு அர்ஜூனின் புஷ்பாவில் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்

அல்லு அர்ஜூனின் புஷ்பாவில் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்

தெலுங்கில் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடித்து வரும் படம் புஷ்பா. ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்கும் இந்த படத்தில் வில்லனாக நடிக்கயிருந்த விஜய் சேதுபதி கால்சீட் பிரச்னையால் விலகினார். அதையடுத்து தற்போது மலையாள நடிகர் பகத்பாசில் அந்த வேடத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேசும் இப்படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கும் தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அல்லு அர்ஜூனின் தங்கையாக வில்லனுடன் நேரடியாக மோதும் பவர்புல்லான எழுத்தாளர் கதாபாத்திரத்தில் அவர் நடிக்கிறாராம். ஆக, முதன் முறையாக ஒரு பான் இந்தியா படத்தில் இணைந்திருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !