சமுத்திரகனி பிறந்த நாளில் வெளியான பர்ஸ்ட் லுக் போஸ்டர்
தற்போது தலைவி, இந்தியன்-2, அந்தகன், டான், ஆர்ஆர்ஆர் என பல படங்களில் நடித்து வரும் சமுத்திரகனி, தெலுங்கில் பஞ்சதந்திரம் என்ற ஆந்தாலஜி படத்திலும் நடித்துள்ளார். ஹர்ஷா புலிபகா இயக்கியுள்ள இந்த படத்தில் சமுத்திரகனியுடன் பிரமானந்தம், ஸ்வாதி, சிவாத்மிகா ராஜசேகர், ராகுல் விஜய், நரேஷ் அகஸ்தியா ஆகியோரும் நடிக் கிறார்கள்.
இந்நிலையில், ஏப்ரல் 26-ந்தேதியான நேற்று சமுத்திரகனியின் பிறந்த நாள் என்பதால் அவரது பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது பஞ்சதந்திரம் படக்குழு. அதோடு, இப்படத்தில் சமுத்திரகனி வயதான வங்கி ஊழியராக வேடத்தில் நடிக்கிறார். இது அவர் நடித்த வேடங்களில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.
இந்த கதாபாத்திரம் பஞ்சதந்திரம் படத்தில் நடிக்கும் அனைவரின் தந்தையை நினைவுபடுத்துவதாக அமைந்துள்ளது. இந்த வேடத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகச்சிறப்பான நடிப்பை சமுத்திரகனி வெளிப்படுத்தியிருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் 10 நாட்களில் முடைவடைகிறது என்றும் அப்படக்குழு தெரிவித்துள்ளது.