பாதுகாப்பாக வீட்டில் இருங்கள் - மகேஷ்பாபு
ADDED : 1622 days ago
தற்போது தெலுங்கில் சர்காரு வாரிபாட்டா என்ற படத்தில் நடித்து வருகிறார் மகேஷ்பாபு. அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கும் இப்படத்தை பரசுராம் இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு வெளிநாடுகளில் நடந்ததை அடுத்து ஐதராபாத்தில் நடந்து கொண்டிருந்தபோது கொரோனா இரண்டாவது அலை பரவியதை அடுத்து படப்பிடிப்பை உடனடியாக ரத்து செய்து விட்டார் மகேஷ் பாபு.
இந்நிலையில், தனது வீட்டில் குடும்ப உறுப்பினர்களுடன் நேரத்தை செலவு செய்து வரும் மகேஷ்பாபு, மனைவி நம்ரதா, மகள் சீதாரா மற்றும் செல்ல நாய் குட்டி புளுட்டோவுடன் விளையாடும் ஒரு போட்டோவை வெளியிட்டுள்ளார். அதோடு, அனைவரும் பாதுகாப்பாக வீட்டில் இருங்கள் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.