ஜுன் 18ல் ஓடிடியில் ஜகமே தந்திரம் ரிலீஸ்
ADDED : 1668 days ago
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ், ஐஸ்வர்ய லட்சுமி நடித்துள்ள படம் ‛ஜகமே தந்திரம். கேங்ஸ்டர் கதையில் உருவாகி உள்ள இப்படம் முடிந்து ஓராண்டாகிவிட்டது. கொரோனா பிரச்னையால் ரிலீஸ் தள்ளிப்போனது. தியேட்டரில் படம் வெளியாகும் என்று கூறி வந்தனர். பின்பு நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியிட போவதாக தயாரிப்பாளர் சசிகாந்த் அறிவித்தார். இதற்கு தனுஷ் அதிருப்தி தெரிவித்தார். இந்நிலையில் தற்போது கொரோனாவால் மீண்டும் தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளதால் தன் முடிவில் பின்வாங்காத தயாரிப்பாளர், ஜுன் 18ல் படம் ஓடிடியில் வெளியாகும் என அறிவித்துள்ளார்.