சூர்யா படத்தில் ரஜிஷா விஜயன்
ADDED : 1619 days ago
சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தவர் மலையாள நடிகை ரஜிஷா விஜயன். இந்தப்படத்தில் இவருக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து அடுத்ததாக பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் 'சர்தார்' படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடிக்க உள்ளார்.
அதுமட்டுமல்ல, 'கூட்டத்தில் ஒருவன்' படத்தை இயக்கிய டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் ஒரு படம் உருவாகிறது. இந்தப்படத்தில் சற்றே நீட்டிக்கப்பட்ட கவுரவ வேடத்தில் சூர்யாவும் நடிக்கிறாராம். இதில் ஆதிவாசி இன மக்களின் பிரச்சனைக்கு ஆதரவாக போராடும் வழக்கறிஞராக சூர்யா நடிக்கிறார் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் இப்படத்தில் நடிகை ரஜிஷா விஜயன் கதாநாயகியாக நடிக்க உள்ளார்.