ஒடிடியில் வக்கீல் சாப் ; தயாரிப்பாளருக்கு புது சிக்கல்
ADDED : 1620 days ago
தெலுங்கில் பவன் கல்யான் நடிப்பில் சமீபத்தில் வக்கீல் சாப் திரைப்படம் வெளியாகி. ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றது. ஆனால் தற்போது பரவி வரும் கொரோனா இரண்டாவது அலை காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டு வருவதால், தியேட்டர்களில் இருந்து திரும்ப பெறப்பட்ட இந்தப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வரும் ஏப்-30லிருந்து வெளியாகிறது.
ஆனால் படம் வெளியாகி 50 நாட்கள் கழித்தே ஒடிடிக்கு கொடுக்கவேண்டும் என ஒப்பந்தம் போடப்பட்டிருந்தது.. இதை தயாரிப்பாளர் தில் ராஜூ மீறிவிட்டதாக கூறி, துபாயில் இந்தப்படத்தை வெளியிட்ட நிறுவனம் அவர் மீது, வழக்கு தொடர்ந்துள்ளது. மேலும் இதற்கான நஷ்ட ஈடாக தங்களுக்கு 3 கோடி ரூபாய் தரவேண்டும் என்றும் தெரிவித்துள்ளது அந்த நிறுவனம்.